தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல்கள்
நிஜமாகா நிழல்கள்

நிஜமாகா நிழல்கள்
ஆசிரியர்: கோ.சந்திரசேகரன்

பதிப்பு: மே 2012

விலை: ரூ.50/-
தள்ளுபடி விலை: ரூ.45/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)

பக்கங்கள்: 80

பிரிவு: சிறுகதை

ISBN: 978-81-923470-0-4

நூல் குறிப்பு:பெரும்பாலான கதைகளில் வருபவர்கள் உண்மையில் எனக்கு மிகவும் தெரிந்தவர்கள் என்பதாலேயே இந்தக் கதைகளை நூலாக வெளியிடுவதில் எனக்குத் தயக்கம் இருந்தது. இதில் பல கதைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் நானே வருகிறேன். என் உள் மனத்தின் ஆசைகளையும், ஏக்கங்களையும், தேடல்களையுமே பல பாத்திரங்களின் வாயிலாகக் கூறியுள்ளேன். ஆனால் நான் என நினைத்து நீங்கள் கண்டுபிடிக்கும் பாத்திரம் உண்மையில் நானாக இல்லாமலும் இருக்கலாம். படித்துப் பாருங்கள் உங்களுக்கே புரியும். (கோ.சந்திரசேகரன்)

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்

தினமணி - 29-06-2015 - நூல் அரங்கம்
நூலாசிரியர் சந்தித்த மனிதர்கள், நண்பர்கள், உறவினர்களைக் கதை மாந்தர்களாகக் கொண்டும் அவர் தம் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களைக் கருவாகக் கொண்டும், எழுதிய பத்துக் கதைகளின் தொகுப்பே இந்நூல்.

இந்தப் பத்துக் கதைகளும் முத்து முத்தான வெவ்வேறு கதைக் கருக்களைக் கொண்டிருப்பது இனிமையான வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்துகிறது.

அரசியல்வாதிகள் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, மக்களின் நலனில் மட்டுமே அக்கறை கொள்ள வேண்டும் என்ற சாமானிய மனிதனின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் ‘நிஜமாகா நிழல்கள்’ எதிலுமே சுயநலமாக உள்ள மனிதன், வீட்டில் வளர்க்கப்படும் மரத்திடமும் எவ்வாறு சுயநலமாக நடந்து கொள்கிறான் என்பதைச் சொல்லும் ‘ஸ்தல விருட்சம்’, பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி பட்டம் மேற்கொள்ளும் மாணவர்கள் தங்களது நெறியாளர்களால் எவ்வாறு அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதைச் சித்தரிக்கும் ‘கறுப்பு ஆடுகள் தெய்வமாகுமா?’, நோயாளிகளைத் தனது தாயைப் போல பாவித்து சிகிச்சையளிக்கும் தாயில்லாப் பிள்ளையான மருத்துவரின் கதையைச் சொல்லும் ‘வலி நிவாரணி’, வேலைக்குச் செல்லும் மருமகளிட்ம கண்டிப்புடன் நடந்து கொள்ளும் மாமியார் காலச் சுழற்சியில் மருமகளால் எவ்வாறு ஓரம் கட்டப்படுகிறார் என்பதை அழகாகச் சித்தரிக்கும் ‘சுளியன்’ என வாழ்வின் பல்வேறு பக்கங்களை வாசகர்களின் முன்பு விரித்துக் காட்டும் அருமையான சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.

book1a
book1b